ரஷ்யாவுடனான பனிப்போருக்குப் பின் முதன்முறையாக 24 மணித்தியாலக் கெடுவில் வடகொரியா மீது அமெரிக்கா அணுவாயுதப் பிரயோகம் செய்யும் எச்சரிக்கை விடுக்கப் படுவதற்கான அழுத்தம் மிகவும் அதிகரித்திருப்பதாக மேற்குலக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ரஷ்யாவுடனான பனிப்போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது 1991 ஆம் ஆண்டே அமெரிக்கா இந்த அணுவாயுதப் பிரயோக எச்சரிக்கையை விடுத்துப் பின்னர் வாபஸ் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது எந்த நேரமும் வடகொரியா மீது அணுவாயுதம் பிரயோகிக்க வேண்டிய உத்தரவு பிறப்பிக்கப் படலாம் என்பதால் அமெரிக்காவின் B-52s ரகப் போர் விமானங்கள் ஆயத்த நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
இந்த விமானங்கள் அதிசக்தி வாய்ந்த அணுவாயுதங்களைக் காவிச் சென்று தரையில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க வல்லன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க விமானப் படையின் தலைமை அதிகாரி டேவிட் கோல்ட்ஃபெயின் இந்த நகர்வானது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கானது அல்ல என்றும் இன்றைய உலக நிலையில் பிரதிபலிப்பே என்றும் கூறியதுடன் இதனைக் கருத்திற் கொண்டே அமெரிக்கா முன்னோக்கிச் செல்ல திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முன்னேற்பாட்டுக்கு முக்கிய 3 காரணங்கள் கூறப்படுகின்றன. அவை வடகொரியாவின் பிடிவாதமான அணுவாயுதப் பரிசோதனை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கிம் அரசுடனான மோதல் போக்கு மற்றும் ரஷ்யாவின் இயங்கு நிலையில் உள்ள ஆயுதம் தரித்த துருப்புக்கள் என்பவை ஆகும்.
அண்மையில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் தெரிவித்த கருத்தில் முதலாவது குண்டுத் தாக்குதலை வடகொரியா ஆரம்பிக்கும் வரை அதனுடனான இராஜதந்திர சமாதான முயற்சிகளைத் தொடருமாறு அதிபர் டிரம்ப் தனக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.
மறுபுறம் வடகொரிய அதிபர் கிம் ஜொன் உங் தனது மக்களுக்கு யுத்த வெறி கொண்ட அதிபர் டிரம்ப் எந்த நேரமும் போரைத் தொடுக்கலாம் எனவும் அதனால் தமது மக்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகத் தெரிய வருகின்றது.

0 Responses to பனிப் போருக்குப் பின் முதன் முறையாக 24 மணித்தியாலத்தில் அமெரிக்கா அணுவாயுதப் பிரயோகம் செய்யும் எச்சரிக்கை?