Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் முன்னால் பிரதமர் சின்ஷோ அபே. தேர்தலில் அவரின் சுதந்திர ஜனநாயகக் கட்சி 465 இடங்களில் 312 இடங்களை சுவீகரித்தது.

எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி 54 இடங்களைப் பெற்றது. இதனால் 2/3 பெரும்பான்மையுடன் சுதந்திர ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதால் சின்ஷோ அபே மீண்டும் பிரதமராகி அங்கு ஆட்சி அமைக்கின்றார். தேர்தல் வெற்றியின் பின் உரையாற்றிய அபே ஜப்பானில் பண வீக்கத்தைக் கட்டுப் படுத்துவேன் எனவும் 2020 இற்குள் புதிய அரசியலமைப்பு அமுல் படுத்தப் படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

 மேலும் இந்த அரசியலமைப்பு மக்களின் விருப்பத்தின் படியும் ஜப்பானியப் பாரம்பரியத்துக்கு மதிப்பளித்தும் அமைக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதைவிட வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மிக வலிமையான இராஜதந்திர அணுகுமுறையைத் தான் பின்பற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வடகொரிய அச்சுறுத்தல் உட்பட ஜப்பான் சந்தித்து வந்த பல நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகவே தேர்தல் ஒரு வருடம் முன்னதாக நடத்தப் பட்டதாக அபே தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 1947 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப் போரில் சரணடைந்த ஜப்பான் அரசு மீது அமெரிக்கா ஜப்பான் தனது அரசியல் அமைப்புச் சட்டத்தில் போரைத் துறக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தைத் தான் மாற்றி அமைப்பேன் என்றுள்ள அபே இதற்காகப் பொது மக்களின் ஆதரவைத் திரட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜப்பான் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறார் சின்ஷோ அபே

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com