Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கறுப்புப் பணத்தினை ஒழிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உறுதியாக ஆதரிக்கும் மக்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் 08ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் நாடு முழுவதும் பரபரப்பானது. இந்நடவடிக்கை வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையாக பார்க்கப்பட்டது. இது அரசியல் தளத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கை எடுத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில், “ஊழல் மற்றும் கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைளை உறுதியாக ஆதரித்து வரும் இந்திய மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.“ என குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் மக்களுக்கு நன்றி: மோடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com