“பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயல்” என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று நவம்பர் 8ஆம் தேதியை கறுப்பு தினமான அறிவித்துள்ளன.
இந்நிலையில் பண மதிப்பிழப்பு குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் “பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர். பிரதமரின் சிந்தனையற்ற செயல். இந்த சிந்தனையற்ற செயலால் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் நேர்மையான கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்கம் காங்கிரஸ் நிற்கும். ஆட்சிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு ஏழை மக்களின் இந்த கண்ணீரே சாட்சி. மழையென பொழியும் இந்த கண்ணீரை பார்க்கவில்லையா?” என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to பண மதிப்பிழப்பு ஒரு பேரிடர்; மோடியின் சிந்தனையற்ற செயல்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!