2008 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரான மும்பை மீது பாகிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டது உலகை உலுக்கியிருந்தது.
வரலாற்றுக் கறையான இந்த சம்பவம் தான் காஷ்மீர் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி பாகிஸ்தானின் இறைமையை வெகுவாகப் பாதித்தும் உள்ளது என பாகிஸ்தானின் முன்னால் வெளியுறவு செயலாளர் ரியாஷ் மொஹம்மட் கான் கருத்துத் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்னால் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே ரியாஷ் மொஹம்மட் கான் இக்கருத்தை வெளியிட்டதாக டாவ்ன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையின் 3 பிரதான இடங்களில் 2008 இல் 10 தீவிரவாதிகள் மேற்கொண்ட மோசமான துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உட்பட 166 பேர் பலியாகி இருந்தனர். இத்தாக்குதலுக்கு முக்கிய குற்றவாளியாக பாகிஸ்தானில் இயங்கும் ஜமாத் உத் டவா என்ற அமைப்பின் தலைவன் ஹஃபீஸ் சயீட் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டியதுடன் தம்மிடம் அவனை ஒப்படைக்குமாறு கோரிக்கையும் விடுத்திருந்தது. மேலும் நியூடெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையே நல்லுறவில் விரிசல் ஏற்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட பனிப்போர் என்ற அளவுக்கு இராஜதந்திர நகர்வுகள் இருந்தன.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்காவுக்கான ஐ.நா தூதர் நிக்கி ஹலேயின் கூற்றுப்படி பாகிஸ்தானைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுருப்பதும் காஷ்மீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் தூதர் டௌக்கிர் ஹுஸ்ஸைன் தெரிவித்துள்ளார்.

0 Responses to மும்பை தீவிரவாதத் தாக்குதல் பாகிஸ்தானின் இறைமையை வெகுவாகப் பாதித்துள்ளது!:முன்னால் வெளியுறவு அமைச்சர்