Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"கூட்டு அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட நாம் விரும்புகின்றோம். எனினும், அதற்காக நாம் எதிர்வரும் ஒவ்வொரு தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் எந்தவொரு இடத்திலும் நாம் அவர்களோடு இணைந்து போட்டியிட மாட்டோம்." என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 20இற்கும் அதிகமான கட்சிகள் சுதந்திரக் கட்சி தலைமை வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தம்முடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், இதில் மூன்று முஸ்லிம் கட்சிகளும், நான்கு தமிழ் கட்சிகளும் அடங்குவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர்கள் இவரும் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் இருவரும் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வேட்பு மனு தாக்கலுக்கான காலம் அறிவிக்கப்படும் வரையில், மேலும் பல கட்சிகளை இணைத்துக் கொள்ள தொடர்ந்தும் பல கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

இம்முறை 'கை' சின்னத்தில் போட்டியிடுவதற்கே பெரும்பாலான கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இது குறித்து சுதந்திரக் கட்சியின் தலைவர் ஆராய்ந்து வருகிறார்.

நாம் தேர்தலுக்கு அஞ்சுவதாக எதிர்க்கட்சியினர் எம் மீது குற்றம் சுமத்தினர். எனினும் நாம் அமைதியாக இருந்தபடி அதற்கான அடித்தளத்தை கட்டம், கட்டமா பலப்படுத்தி வந்தோம். அந்த வகையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நாம் தேர்தலுக்கு ஆயத்தமாக உள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் 99 சதவீதம் பூர்த்தியடையும் தறுவாயில் இருக்கின்றது.” என்றுள்ளனர்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.க.வோடு கூட்டில்லை; ‘கை’ சின்னத்தில் போட்டி: சுதந்திரக் கட்சி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com