Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் நேற்நுக் காலை முதல் நடைபெற்ற, நான்கு அதிர்ச்சி தரும் பாரிய விபத்துக்களில் முப்பதுக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

நேற்றுக் காலை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதி பட்டாசுத் தொழிற்சாலைகொன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 3பேர் பலியாகியிருந்தார்கள்.

பின்னதாக நேற்று மாலை, சென்னையில் ' இந்தியன் -2' படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த கிரேன் சரிந்து வீழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே மூவர் பலியாகிய துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரவு சேலம் மாவட்டம் நரிப்பள்ளம் எனும் இடத்தில், நேபாள யாத்திரீகர்களுடன் சென்று கொண்டிருந்த பேருந்துடன், ஆம்னி பஸ் மோதியதில் 5 பேர் சம்ப இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும், பலர் காயமுற்றுள்ளதாகவும் அறிய வருகிறது.

இதேபோல் திருப்பூர் மாவட்டம், அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த மற்றுமொரு பாரிய சாலைவிபத்தான, பெங்களூர்- கொச்சின் விரைவுச் சொகுசுப் பேரூந்து கண்டெய்னர் லாரியுடன் மோதிக் கொண்டதில் 20 பேர் வரையில் பலியாகியுள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது.

நடைபெற்ற இவ் விபத்துக்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. அவிநாசிக் கோரவிபத்தில் பலியானவர்கள் தொடர்பில் கேரள அரச அதிகாரிகனை விரைந்து செயற்பட கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com