Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 31/1 தீர்மானத்திற்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் செயற்பாட்டிலிருந்து விலகுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவினால் யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் மக்கள் அதிகளவில் எதிர்ப்புத் தெரிவித்த மற்றும் சர்ச்சையை ஏற்படுத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளில் இருந்து விலகுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக பந்துல குணவர்த்தன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு எதிராக, முன்வைக்கப்பட்ட இந்த யோசனை தொடர்பில் நாட்டை நேசிக்கும், இலங்கை மக்கள் எதிர்ப்பை தெரிவித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இவ்வாறான அனர்த்தத்திலிருந்து நாட்டை மீட்பதற்கே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மக்கள் பெரும்பான்மை வாக்குகளை வழங்கிதால் இதற்கு அமைச்சரவை ஏகமனதாக அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் கூறினார்.

குறித்த தீர்மானங்களிலிருந்து விலகும் செயற்பாடுகளை பிற நாடுகளின் ஒத்துழைப்புடன் வெளிவிவகார அமைச்சரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய தேவையாக முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாட்டிற்கு அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ஏக மனதாக ஆதரவு வழங்கியதாக பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

0 Responses to ஜெனீவா தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு அமைச்சரவை அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com