Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் இல்லாமையால் பிரான்ஸ் அரச சார்பற்ற அமைப்பான "அக்சன் பாய்ம்" (ACTION FAIM) பணியாளர்கள் 17 பேர் மூதூரில் கொல்லப்பட்டமை குறித்த விசாரணைகள் பாதிக்கப்பட்டன. இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான நிஷாங்க உடலகம தெரிவித்துள்ளார்.

சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம் இல்லாததாலும், வீடியோ மூலம் சாட்சிகளைப் பெறும் வசதிகள் இல்லாமையாலும் இந்த விசாரணைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பல சாட்சிகள் தமது உயிர் குறித்த அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிவிட்டன. வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் வீடியோ முறையைப் பயன்படுத்தியே சாட்சியங்களைப் பெற வேண்டியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏனைய சாட்சிகளைத் தம்மால் அழைத்திருக்க முடியும். எனினும் ஜனாதிபதி இதுவரை நடைபெற்றவற்றை விசாரணைகளின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை உட்பட இலங்கையில் நடந்த 17 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது விசாரணை முழுமை பெறாமலேயே தனது பணியை முடித்துள்ளது

0 Responses to சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு இல்லாததால், "அக்­சன் பாய்ம்" பணியாளர் படுகொலை விசாரணை பாதிப்பு: விசாரணைக் குழு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com