Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை, உடனடியாக விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப்(CID) பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் ரவி வித்யாலங்கார அழைப்பாணை விடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் லண்டனில் வெளியான டைம்ஸ் பத்திரிகையில் 1,400 அகதிகள் மாதம் தோறும் இறப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அதில் மங்கள சமரவீரவைப் மேற்கோள்காட்டி சில வரிகள் எழுதப்பட்டிருந்தது அரசை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் கவனம் இவர்மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே குற்றப்புலனாய்வுப் பிரிவை ஏவி விட்டுள்ளது இலங்கை அரசு. இருப்பினும் விசாரணைக்குச் செல்ல மறுத்துள்ள மங்கள சமரவீர, தனது வீட்டில் வந்து வாக்குமூலத்தைப் பதிவுசெய்து செல்லுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிவித்துள்ளதாக அதிர்வின் கொழும்பு நிருபர் தெரிவித்தார்.

அரசாங்கத்தைக் கவிழ்க்கும் சதித் திட்டமொன்றை மங்கள சமரவீர தீட்டியுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் தகவல் அறிந்துள்ளதாகவும், இதனால் மங்கள சமரவீர குறித்து அரசாங்கம் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துவருகின்றனர்.

0 Responses to மங்கள சமரவீரவிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து அழைப்பாணை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com