Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் தொடர்பாடல் பிரதிநிதி ஜேம்ஸ் எல்டர் எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் எல்டரை இலங்கையில் தங்கியிருக்க அனுமதி வழங்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஜேம்ஸ் எல்டர் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் உள்ள மக்களின் அவலங்களை வெளிப்படுத்தியிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். இதனால் அவர் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கம், அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.

எல்டர் விடயம் தொடர்பாக மீள்பரீசிலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற போது, ஜேம்ஸ் எல்டர், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பொய்யான தகவல்கள் பலவற்ற வெளிநாடுகளுக்கு அனுப்பியிருந்தாகத் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to ஜேம்ஸ் எல்டர் 21 ஆம் திகதி நாட்டைவிட்டு வெளியேற அரசு உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com