Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசியபோது,

மன்னார் வளைகுடா படுகையில் பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்து விட்டது இலங்கை. இந்திய தென்பகுதியில் பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை, இப்போது சீனாவுக்கு எல்லா ராணுவத் தொழிற்சாலைக்கும் அனுமதி அளித்து விட்டது. இது இந்தியாவுக்கு பேராபத்து.

பிரபாகரன் பற்றி பலவிதமான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் பிரபாகரன் நன்றாக பத்திரமாக இருக்கிறார். உலக அளவில் வாழும் 9 கோடி தமிழர்களும் ஒன்றுகூடி மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் முன்னெடுத்து போரிட வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபட்ச. சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி இவர்களை குற்றவாளிகளாக நிரூபிக்காமல் விடமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.

நன்றி நக்கீரன்.

0 Responses to இரண்டாவது குற்றவாளி மன்மோகன்சிங்;மூன்றாவது குற்றவாளி ராஜபக்சே-நெடுமாறன் பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com