
சமூக கலாச்சார சீரழிவுகளுக்கு மத்தியில்தான் இன்றும் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக பொண்கள் அமைப்புக்களுடன் மற்றும் தனிப்பட்டவர்களுடன் கலந்துரையாடுகையில் இதனைத்தெரிவித்துள்ளார். தமிழ் பொண்களின் இன்றைய பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பெண்கள் சிறுவர் சம்மந்தமான குழுக்கூட்டத்தில் கலந்துரையாடவேண்டிய தகவல்கள் தொடர்பாக பெண்களுடன் கலந்துரையாடினார்.
சிறீலங்காஅரசின் போர் தமிழ் மக்களை கொன்றொழித்ததுடன் தடுப்பு முகாம்களில் அல்லல்படும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆண்களைவிட பெண்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். தமிழ் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் வருகின்ற போதும் சிறீலங்காஅரசின் அதிகாரிகளின் அதிகாரங்களால் அவை தமிழ் மக்களை சென்றடைவதில்லை.
தமிழ் பொண்கள் கோயிலுக்கு செல்லக்கூட பயப்படவேண்டிய அளவிற்கு கலாச்சார சீரளிவுகள் பெருகியுள்ளது. இந்நிலமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து பெண்களின் எதிர்கால நலன்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கபடும்.
சமூக கலாச்சார சீரழிவுகளுக்கு மத்தியில் தமிழ்ப்பெண்கள்: பத்மினி சிதம்பரநாதன்
பதிந்தவர்:
தம்பியன்
23 September 2009



0 Responses to சமூக கலாச்சார சீரழிவுகளுக்கு மத்தியில் தமிழ்ப்பெண்கள்: பத்மினி சிதம்பரநாதன்