Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சிங்கள மாணவர்களிடையே போர் தொடர்பான இனவாத கொள்கையினை ஊட்டும் வகையில் சிறீலங்கா அரசு முனைப்புடன் செயற்படுகின்றது. தாய்நாட்டுக்கான போர் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலங்களை வல்வளைத்துவிட்டு தமிழ் மக்களை நிர்கதிக்குள்ளாக்கிவிட்டு சிங்கள இளைஞர்களிடம் தமிழ் இனவாத கொள்கையினை தூண்டும் வகையில் சிங்கள உயர்தர மாணவர்களின் பரீட்சையின் போது போர் தொடர்பான விபரங்களை கேள்விக் கணைகளாக கொடுத்து விடை எழுதும் செயற்பாட்டில் சிறீலங்காஅரசு இறங்கியுள்ளது.

அதாவது உயர்தர பரீட்சை எழுதும் சிங்கள மாணவர்களிடம் தாய்நாட்டுப்பற்று மற்றும் போர் தொடர்பான உணர்வுகளை கண்டறியும் வகையில் வினாத்தாளில் கோள்விகள் தொடுக்கபட்டு புள்ளிகள் வழங்களப்பட்டுள்ளது. இதில் ஜந்துவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போர் தொடர்பாகவும் மற்றும் தமிழ்மக்களுக்கு உதவிபுரியும் அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடு தொடர்பாகவும் மற்றும் சுதந்திரம் சமாதானம் கலாச்சாரம் தொடர்பாக கட்டுரைகள் எழுதப்படும்.

இவற்றுக்கு 25 புள்ளிகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழக் தேர்வுக்கு இலகுவாக 25 புள்ளியினை பெறக்கூடியவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் இச்செயற்பாட்டால் தமிழ்மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு குறையும் விழுக்காடு காணப்படுவதாக புத்தியீவிகள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to சிங்கள மாணவர்களிடம் இனவாதத்தை தூண்டும் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com