Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அனாதையான குழந்தைகளை தத்தெடுப்பேன்

பதிந்தவர்: தம்பியன் 25 September 2009

இலங்கை போரில் அனாதையான குழந்தைகளை தத்தெடுப்பேன் என்று நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.

நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் தனது 58 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி ஏ.சி. சண்முகம் கூறியதாவது,

இலங்கையில் தமிழ் மக்கள் படும் வேதனையின் காரணமாக இந்த ஆண்டு பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்த ஆண்டு 11 ஆண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களுக்கு உணவு, உடை, கல்வி அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். படித்து முடித்ததும் வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இதுவரை எனது பிறந்த நாளையொட்டி 109 குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்களில் ஒருவர் என்ஜினீயரிங், 2 பேர் கலைக்கல்லூரி, 2 பேர் பாலி டெக்னிக்கில் படித்து வருகிறார்கள்.

இலங்கையில் சிங்கள ராணுவ தாக்குதலில் அனாதையான குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளேன். எத்தனை குழந்தைகளானாலும் ஏற்றுக் கொள்வேன். அனைவரையும் படிக்க வைத்து வேலை வாய்ப்பும் வழங்குவேன்.

ஆரணியில் இலவச திருமண மண்டபம் நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு 100 முதியோர்களை பராமரிக்கும் வசதியுடன் முதியோர் இல்லம் கட்டப்படுகிறது. ஜனவரி மாதம் அந்த இல்லம் திறக்கப்படும் என்றார்.

0 Responses to அனாதையான குழந்தைகளை தத்தெடுப்பேன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com