இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னாட் கொச்னருடன் இணைந்து நாளை சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகமவைச் சந்திக்கவுள்ளார்கள்.
இன்றைய ஐ.நா. கூட்டத் தொடரில் உரையாற்றும் போது இதனை அவர் தெரிவித்தார் என 'இன்னர் சிட்டி பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. "நான் நிச்சயமாக சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்திக்கவேண்டும். நானும் பெர்னாட் கோச்னரும் இணைந்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்திக்கவுள்ளோம" என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
வன்னி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பிரித்தானிய - பிரெஞ்சு அரசுகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இசசெய்தி வெளிவந்துள்ளது.



0 Responses to பிரித்தானிய - பிரான்ஸ் இணைந்து சிறீலங்காவுக்கு அழுத்தம்?