Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கோயம்புத்தூரை அடுத்த சூலூரில் பெரியாரின் 131-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் சங்க தலைவர் குளத்தூர் மணி தலைமை தாங்கினார்.

மாநில பொருளாளர் இராமகிருஸ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசியபோது ''எத்தனைமுறை எங்களை சிறைப்பிடித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் எங்களை செதுக்கிய சிற்பிகள் பெரியாரும் எங்கள் தம்பி பிரபாகரனும்தான்.

தமிழகத்தில் 1 கிலோ அரிசி 1 ரூபாய் விற்கப்படுகிறது. ஆனால் இலங்கையில் 1 கிலோ அரிசி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒருவேளை சாப்பாட்டுக்கு 1000 ரூபாய் வரை தேவைப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சிறீலங்கா அரசு கூறுகிறது.

ஆனால் போர் நிறுத்தம் மட்டும் அங்கு இல்லை. சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை சுட்டு கொல்லும்போது ஏன் இந்திய இராணுவம் பாதுகாக்கவில்லை என்று தெரியவில்லை'' என்று பேசினார்.

0 Responses to எங்களை செதுக்கிய சிற்பிகள் பெரியாரும் எங்கள் தம்பி பிரபாகரனும்தான்: சீமான்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com