
சிறீலங்காப் படையினரின் தடுப்பு முகாம்களில் உள்ள மாணவர்கள் சாதாரணதர பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள்.
சிறீலங்காப் படையினரின் தாக்குதல் காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பெருந் தொகையிலான கல்விபொது சாதாரணதர தேர்வு எழுதும் மாணவர்கள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க கூட ஏற்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில் காணப்படுகின்றார்கள்.
இதுதொடர்பான கல்வித் திணைக்களங்களும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கின்றார்கள். பரீட்சைக்கான விண்ணப்ப முடிவு நாள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்துள்ளமையினால் மாணவர்கள் பரீட்சைக்கு தேற்றமுடியாத நிலை காணப்படுகிறது.
தமிழ்மாணவர்கள் என்றபடியால் சிறீலங்கா அரசின் கல்வித்திணைக்களங்கள் இதுதொடர்பில் அக்கறை காட்டவில்லை என்றும் தமிழ்மாணவர்களின் கல்விவளர்ச்சியை மழுங்கடிக்கும் வகையில் செயற்படுகின்றார்கள் என்றும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தடுப்பு முகாம்களில் உள்ள மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தேற்ற முடியாது
பதிந்தவர்:
தம்பியன்
24 September 2009



0 Responses to தடுப்பு முகாம்களில் உள்ள மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தேற்ற முடியாது