Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா, தடுப்பு முகாம்களில் இருந்து ஆயிரத்து ஆறு பேர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்பட்டனர். ஏ9 வீதியூடாக இவர்களை ஏற்றி வந்த பேரூந்துகள் நேற்று மாலை 5.15 மணியளவில் மிருசுவில் தடுப்பு முகாமை வந்தடைந்தன.

இவர்கள் அனைவரும் மிருசுவிலில் தடுத்து வைக்கப்படுவர் என்றும் அந்தந்தப் பிரதேச செயலகப் பிரிவு ரீதியாக பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் சொந்த இடங்களுக்குச் செல்வதற்கும் மீளக் குடியமர்வதற்கும் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவிலிருந்து 500 பேர் பேரூந்துகளில் அழைத்து வரப்படுவர் என்றும் அவர்கள் வேலணையில் தடுத்து வைக்கப்படுவர் என்றும் யாழ்.செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Responses to வவுனியாவில் இருந்து ஆயிரத்து ஆறு பேர் மிருசுவில் தடுப்பு முகாமுக்கு மாற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com