Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் இடம்பெயர்ந்த மக்களின் அவல நிலையைப் போக்குவதில் எதுவித முன்னேற்றம் காணப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கடும் விசனம் தெவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையி மனிதநேய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் கருத்து தெவிக்கையில், இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழ்க்கை வசதிகள், நடமாடும் சுதந்திர கட்டுப்பாடு மற்றும் உரியகாலத்தில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதிலும் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் பொறுப்புடைமை நடைமுறைகளை காண்பிப்பதிலும் இருந்து வரும் தாமதங்கள் ஆகியன குறித்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று தெவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன ஊழியர்கள் குற்றச்சாட்டு எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெவித்த ஹோம்ஸ், இந்த விவகாரங்களை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எவ்வளவு பாராதூரமானவையாக மதிப்பிடுகிறது என்பதை அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் பி.லி. பஸ்கோவின் நேரடி விஜயம் எடுத்துக் காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

மனிதநேய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் கருத்து தெவிக்கையில், இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வாழ்க்கை வசதிகள், நடமாடும் சுதந்திர கட்டுப்பாடு மற்றும் உரியகாலத்தில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவதிலும் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் பொறுப்புடைமை நடைறைகளை காண்பிப்பதிலும் இருந்து வரும் தாமதங்கள் ஆகியன குறித்து ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று தெவித்துள்ளார்.

0 Responses to இலங்கையின் நடவடிக்கை குறித்து ஜோன் ஹோம்ஸ் கடும் விசனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com