
தமிழீழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 புரட்டாதி 2009) சிறுவர்களால் உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.
தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty International) கனேடியப் பிரிவின் அனுசரணையுடன் இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் பங்குபற்றும் சிறுவர்களால் தாயக மக்களிற்கு சுபீட்ச வாழ்வினை விரைவினில் ஏற்படுத்தித் தரும்படி வேண்டி உலகத்தலைவர்களுக்கு வரையப்படும் மடல்கள் சர்வதேச மன்னிப்புச் சபையினூடாக அத்தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
இந்நிகழ்வானது கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON, Canada.) காலை 12:00 மணிக்கு ஆரம்பமாகிறது. தடுப்பு முகாம்களில் வாடும் தாயக மக்களின் இன்னல் தீர்ப்பதற்காக, கனடாவில் வசிக்கும் அனைத்துத் தமிழ்ச் சிறுவர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகட்கு 647-863-2803
அல்லது
letterwritingevent@gmail.com
தடுப்புமுகாம்களில் தவிக்கும் மக்களுக்காக சிறார்களின் மடல் வரையும் போராட்டம்
பதிந்தவர்:
தம்பியன்
23 September 2009



0 Responses to தடுப்புமுகாம்களில் தவிக்கும் மக்களுக்காக சிறார்களின் மடல் வரையும் போராட்டம்