Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நார்வே வந்துள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் அந்நாட்டு அமைச்சர் எரிக் சோலேமை நேற்று சந்தித்துப் பேசினார். அண்மையில் வெளியாகி பரபரப்புக்குள்ளான இலங்கைத் தமிழர் சித்திரவதை செய்யப்பட்ட விடியோ தொடர்பாக அப்போது பேசப்பட்டதாகத் தெரிகிறது.

பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இருநாள் பயணமாக நார்வே வந்துள்ளார் பான்-கீ-மூன். இதையொட்டி பிரதமர் ஜோன் ஸ்ரோடன் மற்றும் சோலேம் ஆகியோர் பான் கீ மூனை சந்தித்தித்துப் பேசினர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூன், மனித உரிமை விதிகளின் அடிப்படையில் இலங்கை செயல்பட வேண்டும் என்றார். இலங்கையில் அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியில் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பான் கீ மூனைச் சந்தித்துப் பேசும்போது இலங்கைத் தமிழர் சித்திரவதை செய்யப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற விடியோ தொடர்பாகப் பிரச்னை எழுப்பப் போவதாக எரிக் சோலேம் முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மனித உரிமை விதிகளின் அடிப்படையில் இலங்கை செயல்பட வேண்டும்:பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com