Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் தாக்குதல் உலங்கு வானூர்தியான எம்.-24 இன்று புத்தளப் பகுதியில் விழுந்து நொருங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பயிற்சிப் பறப்பில் ஈடுபடும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விமானம் விழுந்து நொருங்கியதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தள துங்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள, இவ் விமானத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர் என அறியப்படுகிறது.

மாவீரர் தினமான இன்று இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளது, சில சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. உண்மையில் இது பறப்பில் ஈடுபடும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

0 Responses to புத்தளத்தில் எம்.ஐ- 24 ரக உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com