![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjg13kwNQCig5UFlHxA3VnquJAVoIYmifhojYzWk4Wp6BAvoqCqrqAGRFAwZF6t7gG001bI695h50Di7v4wRmSGcT84i2w7ag8AmouCC0ew6FYFAkRDKwNrKfZVqvVs8Uh8kfd7CijYTDLQ/s200/01.jpg)
அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை எடுத்து வந்திருந்தனர். ஈழத்தை ஆதரித்து கோஷம் போட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சீமான்,
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தின விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் நான் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் நடக்கும் கூட்டத்தில் பேசுவதற்காக கனடாவிற்கு சென்றேன். நான் தங்கியிருந்த அறைக்கு கனடா நாட்டு போலீசார் இரவு நேரத்தில் வந்தனர். என்னை கைது செய்து இருப்பதாகவும், கூட்டத்தில் பேச அனுமதி கிடையாது என்று கூறினார்கள். பின்னர் உடனே இந்தியாவிற்கு திரும்பி செல்லவேண்டும் என்றனர்.
விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறுகின்றனர். பின்னர் ஏன் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். முள்வேலி முகாமில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்களை உடனே சொந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
0 Responses to ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சீமான்