Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,

கேள்வி: ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள ஒரு பேட்டியில் "இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மவுனமாக அழுவது யாருக்கு தெரியும்?'' என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கு வேக வேகமாக பதில் சொல்லப்பட்டிருக்கிறதே?

பதில்: நான் எனது கடிதத்தில், "இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது'' என்று எந்த இடத்திலும் எழுதவே இல்லை. ஆனால் நான் எழுதாததை, நான் கூறாததை கூறியதாக ஒரு கேள்வியைக் கேட்கச் செய்து, அதற்கு என்னைத் தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் என்னுடைய கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறேன். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டோம். முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள தவறினோம்.

இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து தமிழர்களின் உயர்வுக்காக பாடுபட வேண்டியவர்கள் தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக்கொண்டு போய்விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் இதனை நான் எழுத நேரிட்டது.

இப்படியெல்லாம் பொதுவாக என்னுடைய வேதனையை வெளிப்படுத்தினேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொன்னதாக கற்பனையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்காக என்மீது பாய்ந்து விழுந்து குதறி பதில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த இதழ் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது! அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் ஒருவர் நான் எழுதாததை எழுதியதாகச் சொல்லி கேள்வி கேட்டு அப்படி நான் எழுதினேனா இல்லையா என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னைத் தாக்கி பதில் சொல்லியிருப்பது; என் மீது வசை பாடுவதற்காகவே இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகமேயாகும்.

0 Responses to பல ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை: கலைஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com