Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிநாட்டில் தங்கியிருந்த தமிழ் தேசியக கூட்டமைப்பின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியுள்ளார்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் கடந்த மூன்று வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தார்.

இறுதியாக நோர்வே நாட்டில் தங்கியிருந்து அங்கிருந்து நேரடியாக நேற்றைய தினம் நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே வெளிநாடுகளில் தங்கியிருந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தமை தெரிந்ததே.

தற்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்தமூர்த்தி மட்டுமே தொடர்ந்தும் வெளிநாட்டில் (லண்டன்) தங்கியிருக்கின்றார்.

0 Responses to நாடு திரும்பினார் பா.உ. செல்வராஜா கஜேந்திரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com