Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 26 ஆம் திகதி என அறிவித்தல் வெளிவிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா தனது அரசியல் முடிவு குறித்து இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் அவர் ராணுவ தளபதியாக இருந்தபோது அணுகிய விதத்துக்கும் இப்போதைய அணுகுமுறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக இலங்கை வாராந்த ஆங்கில இதழின் செய்தியாளர் கூறியுள்ளார்.

இச்செய்தியாளரை தமது அலுவலகத்துக்கு அழைத்த சரத் அவருடன் பேசியுள்ளதாக ஏஷியா ட்ரிபூன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பத்திரிகையாளரும் கேட்டுள்ளார். அதற்கு, வன்னியிலுள்ள தமிழ்ப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயதான் தம்மைப் பணித்ததாகக் கூறியுள்ளார் சரத் பொன்சேகா.

வன்னிப் போரின்போது நடந்த யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமெரிக்க அரசு அழைத்தபோது தப்பினால் போதும் என ஓடிவந்த சரத் இப்போது ஒரு பத்திரிகையாளரிடம் கூறுபவற்றை அங்கு அமெரிக்காவிடம் கூறியிருக்கலாமே. இதை இலங்கை பத்திரிகையில் கூறி என்ன பயன். எல்லாப் பழியையும் கோத்தபாயமேல் போட்டு சரத் தான் தப்பிக்கப் பார்க்கிறார். சிங்கள இனத்தவரிடையே தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளது. அதற்காக சில கசப்பான உண்மைகள் சில விரைவில் வெளியாகும்.

என்ன தான் எதிரியாக இருந்தாலும் சரத் கோத்தபாயவை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுக்கவில்லை, ஆனால் சில தமிழர்களோ என்ன செய்தாவது அரசுடன் ஒடியிருக்கவும், மகிந்தவைக் கட்டி அணைக்கவும் காத்திருக்கின்றனர். எப்போது திருந்தப்போகிறார்கள் இவர்கள்.

0 Responses to கோத்தபாயதான் தமிழ் மக்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்: பொன்சேக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com