பதிந்தவர்:
தம்பியன்
25 November 2009
ரத் பொன்சேகா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாதுகாப்புச் சேவைகளிலுள்ள அவரது உறவினரகள் இடம்மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
இதன்படி நகரப் போக்குவரத்து பிரிவின் இயக்குநர் நாயகம் எஸ்.
எஸ்.
பி இந்து கருணாரட்ண போலீஸ் தலைமலுவலகத்துக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் அறிவுறுத்தலின் பேரில் பல இடமாற்றங்களை போலீஸ் மாஅதிபர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் புலனாய்வுத்துறை இயக்குனர்,
எஸ்.
எஸ்.
பி ரவி வைத்தியலங்கார குற்றப்பிரிவின் தலைவராக மாற்றப்பட்டார்.
ஆனால் அவர் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வைதியலங்காரவுக்கு எந்தவொரு மதிப்புமிக்க பதவியும் கொடுக்கப்படவில்லை என்றும் தலமையகத்தில் அவர் இருப்பதற்குக் கூட இன்னும் ஒரு மேசையும் கதிரையும் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் அறியப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயர்கள் அறிவிக்கப்படமுன்னர்,
மேலும் பல இடமாற்றங்கள் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக போலீஸ் திணைக்கள வட்டார தகவல்கள் கூறுகின்றன.
0 Responses to சரத்தின் இன்னொரு உறவினரும் சேவை இடமாற்றம்