Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"லங்கா நியூஸ்" இணைய ஆசிரியர் சந்தருவன் சேனதீரவைக் கைது செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி குற்றப்புலனாய்வுப் பொலிஸார் சமர்பித்த விண்ணப்பத்தை..

மறுத்த கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த கப்பு ஆராய்சி, அடுத்த 14 நாள்களுக்குள் குற்றப்புலனாய்வு பொலிஸார் முன் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்குமாறு அந்த இணைய ஆசிரியருக்கு உத்தரவு வழங்கும் கட்டளையை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் இடமாற்றங்கள் குறித்து மேற்படி இணையதளத்தில் வெளியான செய்தியின் ஆதாரம் குறித்து அறிவித்ததே மேற்படி ஊடக ஆசிரியரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதாகவும் அதனால் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் அவர் தவிர்த்து வருவதால் அவரை கைது செய்து விசாரிப்பதற்கான கட்டளையை நீதிமன்றம் விடுக்க வேண்டும் எனவும் பொலிஸார் நேற்று பிரதமநீதவானிடம் விண்ணப்பித்தனர்.

அவ்வேளை ஊடக ஆசிரியரின் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் விண்ணப்பத்தை ஆட்சேபித்தனர். ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்று குறித்து பொலிஸார் விசாரிக்கலாம். ஆனால் ஊடகவியலாளரின் செய்தி மூலத்திற்கான ஆதாரத்தை வெளப்படுத்தும்படி யாரும் வற்புறுத்த முடியாது. அதற்காக ஊடகவியலாளரை கைது செய்யவும் முடியாது. எனவே கைதுக்கான அனுமதி உத்தரவு எதையும் நீதிமன்றம் விடுக்கக் கூடாது என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
இரு தரப்பு வாக்கு மூலங்களையும் பரி சீலித்த நீதவான் அடுத்த 14 நாள்களுக்குள் பொலிஸாரின் முன் ஆஜராகி சம்பந்தப்பட்ட விடயம் குறித்து வாக்குமூலம் அளிக் குமாறு சம்பந்தப்பட்ட இணையத்தள ஆசிரியருக்கு உத்தரவிடும் கட்டளையைப் பிறப்பிக்கப் பணித்தார்.

0 Responses to "லங்கா ஈ நியூஸ்'' ஆசிரியரை கைது செய்ய நீதிமன்றம் தடை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com