Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளைப் புறக்கணிக்கும்படியான பிரச்சார போராட்டம் நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை மேரிலாண்டிலுள்ள கப் மற்றும் பனானா ரிபப்ளிக் (Gap and Banana Republic) விற்பனை நிலையங்களின் முன்னால் பெருமளவான அமெரிக்க தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பொருட்களை வாங்கவந்த மக்களிற்கு ஒரு சிக்கலையும் ஏற்படுத்தாமல் இலங்கையில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்க வேண்டாம் என்று அதற்கான விளக்கங்களைக் கூறி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, போர் வன்முறைகள் ஆகியன போன்ற இலங்கை நிலமைகளை எடுத்துக் கூறிய துண்டுப் பிரசுரங்களும் அமெரிக்க மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளன. அண்மையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள அரசின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அத்துண்டுப் பிரசுரங்கள் விளக்கமளித்துள்ளன.

சான் பிரான்சிஸ்கோவினை தலைமையகமாகக் கொண்ட கப் விற்பனை நிலையமானது கப், பனானா ரிபப்ளிக், ஓல்ட் நேவி மற்றும் பல வர்த்தகச் சின்னங்களின் கீழ் தாம் இறக்குமதி செய்த ஆடைகளை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கப் மற்றும் விக்ரோரியாஸ் சீக்கிரெட் ஆகிய பெரு நிறுவனங்களை இலக்காகக் கொண்டு வட அமெரிக்க தமிழர்களால் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியே நேற்றைய போராட்டம் என அதன் அமைப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி செப்ரம்பர் மாதத்தில் 19.5 வீதத்தால் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி வருமானம் 4.9 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்றுமதியில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்துவதே தமது குறிக்கோள் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

0 Responses to இலங்கை ஆடைகளைப் புறக்கணிக்கும் போராட்டம் வெற்றியளிக்கிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com