இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் டெல்லியில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு சிலர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்கள். இதுகுறித்து டெல்லி சாணக்யபுரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 12 பேர் டெல்லி ஐகோர்ட்டில் ஏற்கனவே முன் ஜாமீன் பெற்று இருந்தனர். இந்நிலையில், ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், அவர்கள் 12 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட 12 பேரும் ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு நபர் ஜாமீனிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.



0 Responses to இலங்கை தூதரகம் மீது தாக்குதல்: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஜாமீன்