Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் கூட்டுப்படைகளின் தலைமையதிகாரி ஜெனெரல் சரத் பொன்சேகாவை கடந்த மாத இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை செய்ய முற்பட்டதும், அரசு பல பிரயத்தனங்கள் செய்து அவரை உடனும் நாட்டுக்கு திருப்பி அழைத்ததும் நன்குதெரிந்ததே. ஆனால் தாம் அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறான ஒரு விசாரணைக்கு தாம் சரத் பொன்சேகாவை அழைத்திருக்கவில்லை என அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகொன தெரிவித்துள்ளார். சரத் விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கு ஒருவித சான்றுகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோஹனவின் கூற்று இந்த மாதம் வெளிவிவகார அமைச்சு விடுத்திருந்த கூற்றுக்கு முற்று முழுதாக முரணானதாக உள்ளது. வெளிவிவகார அமைச்சின் கூற்றில், கடந்த மாத கடைசியில் அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் இருந்து சரத் பொன்சேகாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அதில் அவர் நவம்பர் 4 ஆம் திகதி ஒக்லகமா நகரில் விசாரணை ஒன்றுக்கு சமூகமளிக்கும்படியும் கேட்கப்பட்டார் எனக் கூறப்பட்டிருந்தது. அதோடு தொலைபேசி மூலம் சரத்தை அழைத்த அமெரிக்க அதிகாரிகளும் அவரை விசாரணைக்கு வரும்படி கேட்டதாக மேலும் கூறப்பட்டது.

இதேநேரம் சரத் அந்த விசாரணைகளிலிருந்து தப்பி ஓடி இலங்கைக்கு வர ஒத்தாசைகள் புரிந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வெளிவிவகார அமைச்சு நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது கோஹனவோ முற்றுமுழுதாக பல்டியடித்துள்ளார்.

0 Responses to பொன்சேகாவை அமெரிக்கா விசாரணைக்கு அழைத்திருக்கவில்லை - கோஹன பல்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com