Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம்

பதிந்தவர்: தம்பியன் 24 November 2009

பண்டாரநாயக்க நினைவு தூபிக்கு வணக்கம் செலுத்த சென்றவர்களை அரசியல்வாதிகள் சிலரின் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் அரச தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அண்மையில் பண்டாரநாயக்க நினைவுத்தூபிக்கு வணக்கம் செலுத்த சென்ற பொதுமக்கள் சிலரை, அங்கு திடீரென வாகனங்களில் வந்து இறங்கிய குழுவினர் தாக்கியதாகவும் கற்களை வீசி அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள சந்திரிகா குமாரதுங்க -

பண்டாரநாயக்க நினைவு தூபிக்க வணக்கம் செலுத்துவது தனி மனித உரிமை என்றும் அதனை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்றும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி இந்த விடயத்தை சிலர் அரசியலாக்க முற்பட்டுள்ளார்கள் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பின்னணியில் அப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளனர் என்பது தனக்கு தெரியும் என்றும் தாக்கப்பட்ட மக்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்யவில்லை என்றும் தன்னிடம் வந்து விடயத்தை கூறினர் என்றும் இது விடயத்தில் உடன்நடவடிக்கை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவுக்கு சந்திரிகா கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com