திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தாழ நல்லூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் மாவீரர் நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினால் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் படம் மற்றும் போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வீர வணக்கம் வீர வணக்கம் என்று கோஷம் எழுப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பின் இளவழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
0 Responses to மாவீரர் நாள்: தியாகி முத்துக்குமரன் படத்துக்கு அஞ்சலி!