![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6VHQdlqN2A6nuN1f1Cmsg-3_3v_qXIDdkwZLKUOEpPesBK2-Gy-nkFJ9QEFNx-0efvpO8sz1x13sE25eKhuOrQvmFxmQKIlknDLlNlPnuddt1zgt0YOV-GT-b-cndR-yqrsZ6XyLdEhRP/s200/0001.jpg)
பல்லாண்டுகாலம் அடிமையினமாக வாழ்ந்த தமிழினத்தை தலைநிமிரச் செய்ததுடன், சிங்களத்திடம் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, தமிழர் தாயகத்தில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கெளரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழரசு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்ற தமிழீழ மக்களின் 1977ஆம் ஆண்டு தேர்தல் தீர்ப்பையேற்று, தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர் செல்வங்களிற்கு, நெதர்லாந்தில் உத்ரெக் நகரில்,நேற்று 27.11.2009 வெள்ளி நடைபெற்ற மாவீரர்நாளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் வணக்கங்களைச் செலுத்தினர்.
நிகழ்வின் ஆரம்பத்தில், மதியம் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை மாவீரரின் தாய் ஏற்றிவைக்க, நெதர்லாந்தின் தேசியக்கொடியினை முக்கிய தமிழினச் செயற்பாட்டாளரும் தமிழீழத் தேசியக்கொடியினை மாவீரரின் சகோதரியும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து, மணியொலிக்கப்பட்டு, அனைத்து மாவீரர்களிற்கும் சிங்கள, இந்திய அரசுகளினாலும் இரண்டகர்களினாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களிற்கும் நாட்டுப்பற்றாளர்களிற்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சிறப்புக் காணொளித்தொகுப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவிடத்தில் துயிலுமில்லப்பாடல் ஒலிக்க, மாவீரர் குடும்பங்களால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, தமிழமுத இசைகுழுவினர் மாவீரர்பாடல்களை வழங்க,மக்கள் அனைவரும் நீண்டவரிசையில் காந்திருந்து கார்த்திகைப்பூக்களால் தங்கள் மலர்வணக்கங்களை மாவீரர்களிற்குச் செலுத்தினர்.
நிகழ்வுகளாக, மாணவர் உரைகள், நினைவுரை, இளையோர் உரை,எழுச்சிநடனங்கள், எழுச்சிக்கவிதை என்பன இடம்பெற்றன. நிகழ்வின் முடிவில்,தமிழர்களிற்கான நிரந்தரத்தீர்வு தமிழீழமே எனவும் தாய்மண்ணின் மீட்பிற்காக தொடர்ந்து உழைப்போம் என அனைத்து மக்களும் எழூந்து நின்று கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தேசியக்கொடிகள் கையேற்கப்பட்டு எழுச்சியுடன் இந்நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.
![hollen_heroes_day_2009_1 hollen_heroes_day_2009_1](http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/hollen_heroes_day_2009_1.jpg)
![hollen_heroes_day_2009_2 hollen_heroes_day_2009_2](http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/hollen_heroes_day_2009_2.jpg)
![hollen_heroes_day_2009_3 hollen_heroes_day_2009_3](http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/hollen_heroes_day_2009_31.jpg)
![hollen_heroes_day_2009_4 hollen_heroes_day_2009_4](http://www.puthinamnews.com/wp-content/uploads/2009/11/hollen_heroes_day_2009_4.jpg)
0 Responses to நெதர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு