Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்த ஆண்டு என்றுமில்லாத வகையில் மக்களின் பேரெளிச்சி மாவீரர்நாள் மண்டபத்தினையும் மக்களின் மனங்களையும் நிறைத்திருந்தது ஒஸ்லோ, பேர்கன், ஸ்தவங்கர், துரம்சோ, உல்ஸ்ரன்வீக், மோல்டே துரண்கைம், ஆகிய நோர்வேயின் நகரங்களில் மாவீரர்நாள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக ஒஸ்லோவில் 3500ற்க்கு மேற்ப்பட்ட நோர்வே வாழ் தமிழ்மக்கள் கலந்து கொண்டு எம் தேசத்தின் புதல்வர்களின் நினைவுகளை இதயத்தில் தாங்கிநின்றனர்.ஆண்டாண்டு காலமாய் அடிமைகளாகவும் எதிரியின் கைப்பொம்மைகளாகவும் நானிக்கோணி வாழ்ந்த தமிழ் இனத்தில் பிறப்பெடுத்த எம் தலைவர் மேதகு, வே. பிரபாகரன் அவர்களின் எண்ணக்கருவை சுமந்து சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தின் விடுதலைக்காக தம்மையே தந்தவர்கள் மாவீரர்கள்.

ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு வாழும் மனிதவாழ்வுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழீழக்கனவை மட்டும் நெஞ்சில் தாங்கி விடுதலைக்கு வித்தாகிய வீரரின் இந்த புனிதநாளிற்கான மண்டபம் சிவப்பு மஞ்சள் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு தமிழ்த்தேசியத்தின் ஆழமான நினைவுகளை கண்களுக்கு விருந்தாக்கி மண்ணை மனதுக்குள் நிறுத்தியது.இந் நிகழ்வானது தேசிக்கொடியேற்றலுடன் மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்வு ஆரம்பமாகியது இம்முறை தலைமைச்செயலகத்தால் மாவீரர்நாள் அறிக்கை புலிகளின்குரல் ஊடாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.காலத்தின் தேவை கருதிய காத்திரமான அறிக்கையாகவும் மக்களால் உணரப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் உரையும், பிரான்ஸ் தேசத்தில் இருந்து வருகை தந்தவரும் பாண்டிச்சேரியை பூர்வீகமாகவும் கொண்ட பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்ற பேராசிரியர் சுகிர்தராஜ் அவர்களின் உரையும் உணர்வுபூர்வமாகவும். அதேவேளை விடுதலைப்போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும் தொடர்ந்தும் சளைக்காமல் இலக்கை நோக்கி போராட்டத்தினை நகர்த்த வேண்டும் எனவும் இதர்க்கு பல்வேறு போராட்டங்கள் இன்றும் உதாரணமாக இருப்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக மாவீரர்களின் நினைவுகளை சுமந்த பாடல்கள் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் இசையில் இசைக்கப்பட்டு இளைய உயிர்களின் உயிரோட்ட நினைவுகள் மனத்திரையில் பரவியவேளை இறுதியாக ஒலித்த நம்பிக்கை தரும் நம்புங்கள் தமிழீழம் பாடலுக்கு முன்பாக உறுதிடமொழி பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அதில் தமிழீழ தாய்நாட்டிற்காகத் தமது இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் இப்புனித நாளில் நான் மேற்கொள்ளும் உறுதிமொழியாவது நான் உலகில் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழமே எனது இலட்சியம் இந்த இலட்சியத்திற்காக அற்பணிப்புடன் செயல்ப்படுவேன் என்பதுடன் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என இந்நாளில் உறுதி மொழி எடுத்துக்கொள்கின்றேன் என அனைத்து மக்களும் சத்தியம் செய்துகொண்டனர்.

இபபுனித நாளுக்கு மக்களை செல்லவிடாமல் வீட்டில் முடக்குவதற்கா பல்வேறு பொய்யான செய்திகளை உலாவவிட்டு குழப்பமுனைந்தும் மக்கள் என்றுமில்லாதவாறு பெரும் திரளாக கலந்துகொண்டனர். என்பது குறிப்பிடதக்கது.


norway_heroes_day_2009_1
norway_heroes_day_2009_2
norway_heroes_day_2009_3
norway_heroes_day_2009_4
norway_heroes_day_2009_5
norway_heroes_day_2009_8
norway_heroes_day_2009_9
norway_heroes_day_2009_11
norway_heroes_day_2009_12

0 Responses to நோர்வேயில் ஒஸ்லோ உட்ப்பட ஏழு நகரங்களில் மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வு.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com