Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வடபகுதியில் தனது சூறாவளி தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளார் என்று அவரது ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக்கூட்டமும் அதனை தொடர்ந்து பேரணியும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர்களையும் மாலை - பேரணி நிறைவடைந்த பின்னர் - யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் - முஸ்லிம் வர்த்தகர்களையும் பொன்சேகா சந்தித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாள் - ஜனவரி 3 ஆம் திகதி - மன்னாரிலும் அதன்பின்னர் வவுனியாவிலும் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கு அடுத்த நாள் ஜனவரி 4 ஆம் திகதி கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டு, அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஆனால், அந்த கூட்டங்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஜனவரி 5 ஆம் திகதி மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் அதற்கு அடுத்த நாள் 6 ஆம் திகதி திருகோணமலையில் மூதூரிலும் தனது பிரசாரக்கூட்டங்களை நடத்துவதற்கு பொன்சேகா திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கறது.

இதேவேளை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பொன்சேகா கந்தளாயிலும் ஹிங்குராங்கத்தவிலும் இரண்டு பிரசாரக்கூட்டங்களில் பேசவுள்ளார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to வடக்கில் பொன்சேகா சூறாவளி பிரசாரம்: ஜனவரி 2 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com