Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் போரின் கடைசி காலப்பகுதியில் படையினரிடம் சரணடையவரும்போது கொல்லப்படவில்லை. ஏற்கனவே படையினரால் பிடிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைத்திருந்தபோது ஏற்பட்ட சண்டையின்போதே அவர் படுகொலை செய்யப்பட்டார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கையில் - போரின் கடைசி நாட்களில் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பிலும் இரகசிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதன்படி, சிறிலங்கா இராணுவத்தினரிடமிருந்து கசிந்த செய்திகளின் பிரகாரம் விடுதலைப்புலிகளிள் தளபதிகளில் ஒருவரான ரமேஷ் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறாரே தவிர, சரணடையும்போது சுடப்படவில்லை என்று நம்பகரமாக தெரியவருகிறது.

இதேவேளை, சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபை முழுவீச்சில் தனது விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. இந்த விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகள் உட்பட பலரிடம் தகவல்கள் பெறப்பட்டுவருகின்றன. இந்த விசாரணைகளின் ஒரு அங்கமாகவே, அண்மையில் .நா. அதிகாரி பிலிப் அல்ஸ்டன் சிறிலங்கா அரசிடம் பொன்சேகாவின் அறிக்கை தொடர்பாக விளக்கம் கோரியிருந்தார். விசாரணைகளை மேற்கொண்டுவரும் .நா.வுக்கு சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரி ஒருவரின் அறிக்கை மிகவும் சுலமான ஆதாரமாக மாறியிருக்கிறது - என்று கூறின.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to தளபதி ரமேஷ் சரணடையும்போது கொல்லப்படவில்லை: கொழும்பு தகவல்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com