Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடகொரியாவிலிருந்து பெருந்தொகையான ஆயுதங்களுடன் சிறிலங்கா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றை தாய்லாந்து அரசு கைப்பற்றியுள்ளது. கடற்படைக்குரிய சுமார் 53 தொன் ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த விமானமே இவ்வாறு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கசகஸ்தானில் பதிவு செய்யப்பட்ட இந்த விமானம் பாங்கொக்கில் தரையிறங்கமாறு உத்தரவிடப்பட்டு சோதனை செய்தபோதே இந்த ஆயுத விவகாரம் தெரியவந்ததாகவும் விமானத்திலிருந்த நான்கு கசனஸ்தானியர்களையும் இன்னொருவரையும் தாய்லந்து அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவிலிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்த இந்த சரக்கு விமானத்தை சந்தேகத்தின்பேரில் தாய்லாந்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் விமான நிலையமான முயாங்கில் தரையிறக்கி, சோதனையிட்ட பின்னர் தாம் தடுத்துவைத்திருப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் விமானத்தை தமது படையினர் பாதுகாப்பாக சோதனையிடுவதாகவும் தாய்லாந்து அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து இராணுவ பேச்சாளர் ஒருவர் இது பற்றி தெரிவிக்கையில் -

இந்த விமானத்தில் றொக்கட் லோஞ்சர்கள், பயஙகரமான சேதங்களை விளைவிக்கக்கூடிய வெடிபொருட்கள், ஏவகணைகள் என அப்படியான ஆயுதங்கள் மட்டும் 45 தொன்கள் உள்ளன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் தற்போது தாய்லாந்து இராணுவ தளமொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த விமானம் வடகொரியாவின் பொயங்குயாங் விமான நிலையத்திலிருந்து நேரடியாக வந்து கொண்டிருந்தது. தாய்லாந்து அரசு தரையிறக்கக்கோரியதன் பேரிலேயே தரையிறக்கப்பட்டது - என்றார்.

இதேவேளை, சிறிலங்கா அரசிடம் இது பற்றிக்கேட்டபோது தாம் எந்த ஆயுதங்களையும் எந்த நாட்டிடமும் கொள்வனவு செய்யவில்லை என்றும் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆயுதங்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.



0 Responses to சிறிலங்கா நோக்கி 53 தொன் ஆயுதங்களுடன் வந்துகொண்டிருந்த விமானத்தை தாய்லாந்து அரசு கைப்பற்றியது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com