குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சந்தேகிப்பவர்களை எந்த பிடியாணையும்மின்றி கடத்தி சென்று இரகசிய இடங்களில்வைத்து விசாரணை செய்வதற்கென சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகள் அடங்கியக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காவல்துறைமா அதிபரின் உத்தரவின்றி செயற்படும் இந்த விசேடக் குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுவதாக அறியமுடிகிறது.
கடந்த 3ஆம் திகதி பொரல்ல, தேவி பாலிக்கா சுற்றுவட்டப் பகுதியில் தேயிலை வர்த்தகர் உள்ளிட்ட நான்கு பேர் கடத்தப்பட்ட சம்பவத்தை இந்தக் குழுவே மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. இந்தத் தேயிலை வர்த்தகர் வத்தளை பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக தேயிலையை ஏற்றுமதி செய்துவந்ததாக விசாரணைக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலைகளிலிருந்து களஞ்சியங்களுக்கு தேயிலையை எடுத்துச் செல்லும் போது தனது சகாக்களுடன் சேர்ந்து நுட்பமான முறையில் அவற்றைக் கொள்ளையிடும் இந்த வர்த்தகர், பிரபல பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்களையும் இந்த நடவடிக்கைகளுக்காக தம்முடன் இணைத்துக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட நபர்களுடன், காவல்துறைத் தலைமையகத்தின் குற்றத்தடுப்புப் பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் ஒருவரும் இருந்ததுடன், இதன் காரணமாகவே செயற்பட்டுவரும் விசேட விசாரணைக் குழு தொடர்பாக காவல்துறை மா அதிபருக்கும் அறியக்கிடைத்ததாக இரகசிய காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

0 Responses to பிடியாணையின்றி ஆட்களை கடத்துவதற்கு சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள புலனாய்வுக்குழு