போரின் போது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த இளவயது மாணவர்கள் பலருக்கு, அவர்களின் உடலிலிருந்து அவை இன்னமும் அகற்றப்படாமலிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
வழமையான காச நோய் சோதனையின் போது சில மாணவர்கள் தமது உடலில் துப்பாக்கி ரவைகள் இருந்ததாக கூறியதாகவும், உடனே அவர்களை எக்ஸ்ரே மூலம் சோதித்ததில் இது உண்மையென தெரியவந்ததாகவும் இந்த பிரச்சினையை கண்டறிந்த யாழ்மாவட்ட காசநோய் வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ் ஜமுனானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
இதுவரை 13 மாணவர்கள் உடலில் ரவைகளும், குண்டு வெடிப்புத் துகள்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் அறுவைச் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பலரின் உடலில் இது போன்ற துகள்களும், ரவைகளும் இருக்க வாய்ப்பு இருப்பதால், இது போன்ற பாதிப்புக்குள்ளான மக்கள், மருத்துவ சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் எஸ் ஜமுனானந்தா தமிழோசையிடம் தெரிவித்தார்.
நன்றி: தமிழோசை



0 Responses to மாணவர்களின் உடலில் துப்பாக்கி ரவைகள்: மருத்துவ சோதனையில் கண்டுபிடிப்பு