அரச தேர்தல் முடிவடைந்ததும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அரச தலைவரின் சிரேஷ்ட ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷ இந்தியாவிடம் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா அரச தலைவரின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, செயலாளர் லலித் வீரதுங்க, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகிய மூவர் அடங்கிய குழு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்றுப் புதுடில்லியில் சந்தித்தது. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் குறித்து இக்குழு அங்கு ஆராய்ந்தது எனக் கூறப்பட்டது. இந்தச் சந்திப்பு சிறந்த முறையிலும், சுமுகமான சூழலிலும் இடம்பெற்றதாக பஸில் ராஜபக்ஷ பின்னர் தெரிவித்தார்.
சிறிலங்காவின் வட பகுதியில் முகாம்களில் வாழும் மக்களுக்கு அனைத்து ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். தேர்தல்களுக்கு முன்னதாக இந்த மக்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்கள் இம்முறை வாக்களிக்கப் போகின்றனர் என பஸில் ராஜபக்ஷ பதிலளித்தார்.
அரசியல் தீர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த பஸில் ராஜபக்ஷ, "இது குறித்து எமக்கு உறுதியான புரிந்துணர்வுள்ளது. அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக அரசியல் தீர்வை முன்வைக்கும் பணியை முன்னெடுப்போம் என உறுதியளிக்கிறோம்.'' என்றார். ஜனாதிபதித் தேர்தலிற்குப் பின்னர் அரசியல் தீர்விற்கு அவசியமான சகல அரசமைப்பு மாற்றங்களையும் மேற்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசினது அனைத்து நலன்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் அந்த நாட்டுடன் சிறிலங்கா துணை நிற்கும் எனக் குறிப்பிட்ட பஸில் ராஜபக்ஷ, எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான பேச்சின்போது பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பவில்லை என்று தெரிவித்தார்.

0 Responses to தமிழருக்கு தீர்வு வழங்குவோம் தேர்தல் முடிந்த பின்னரே