ஈழத்தமிழர்கள் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்று புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈழத்தமிழர்கள் தங்கள் சுய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் 60 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களது பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. அங்கு தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினையில் மத்திய அரசு தமிழர்களுக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை.
எனவே, தமிழர்களின் நலனை பாதுகாக்க வருகிற பிப்ரவரி மாதம் 6, 7 ந் தேதிகளில் கோவையில் உலக தமிழர் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்கிறார்கள்.
தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் நலனை காக்க மாநாடு நடத்தப்படுகிறது. இதில் அரசியல் கலப்பு இன்றி அனைத்து தமிழ் ஆர்வலர்களையும் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

0 Responses to ஈழத்தமிழர்கள் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை