"சரத் பொன்சேகா, ஒரு சாதாரண இராணுவத் தலைவர் மாத்திரம் தான்" - போர்க்குற்றத்தை ஒப்புக்கொள்ளும் கோத்தபாய
"சரத் பொன்சேகாவை ஒரு சிறந்த இராணுவத் தளபதியாகவே நாம் கருதினோம். சரத் பொன்சேகா மேற்கொண்ட கடமைகளை வேறொருவருக்குக் கையளித்திருந்தால் அவரும் அக்கடமைகளை சிறந்த முறையில் செய்திருப்பார்" என கோத்தாபய சிங்கள வார இதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட கடமைகளை எவரும் எளிதில் செய்துமுடிக்கலாம். சரத் பொன்சேகாவுக்கு நாமே வழிகாட்டிகளாக இருந்தோம். அவருக்கு தேவையான பக்க பலத்தையும் ஒத்துழைப்பையும் அத்துடன் ஆயுதங்களையும் நாமே வழங்கினோம்.
இது மாத்திரமல்ல, நாம் அனைத்து சர்வ தேச நாடுகளின் அழுத்தங்களையும் நிறுத்தினோம். அதையும் நாமே வழங்கினோம். எவ்வளவு இராணுவ வீரர்களை அதிகத்திருக்கின்றோம் என்பதைப் பாருங்கள். தரைப் படையினர் மாத்திரமல்ல, கடற்படையினாலும், விமானப் படையினாலும் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினாலும் பெரும் எண்ணிக்கை அளவிலான ஆட்பலம் எம்மால் அதிகரிக்கப்பட்டது.
இராணுவப் படை பெரும் எண்ணிக்கையளவில் அதிகக்கப்பட்டதுதான். ஆனாலும் நாம் விமானப் படை மற்றும் கடற்படை என்பவற்றையும் இதேவிதமாக பலப்படுத்தினோம். அவர்களும் இராணுவப் படையினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் இப்படைகளை திருகோணமலை மற்றும் வன்னிப் பகுதிகளிலுள்ள காடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினோம். அத்துடன் கடற்படையினர் கரையோரப் பிரதேச பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவினர் ஆரம்பத்தில் புலிகளின் அச்சுறுத்தல்கள் இருந்த பகுதிகளில் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும் யுத்த இறுதிக் கட்டத்தில் 5 ஆயிரம் படையினரை பாதுகாப்பு வலயத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த படையினருக்கு ஒத்துழைப்பு வழங்க அனுப்பி வைத்தோம். இதன் பிரகாரம் இராணுவப் படை இரு மடங்கை விடவும் அதிகமானது. சரத் பொன்சேகா, ஒரு சாதாரண இராணுவத் தலைவர் மாத்திரம் தான். எனினும் ஒரு இராணுவத் தளபதியாக இருந்து, அவர் தனது கடமைகளைச் செய்து வந்தார்.
அவர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அல்லது ஜெனரல் விஜயவிமலரத்ன ஆகியோர் போன்று அவ்வளவு பிரசித்தி பெற்றவரல்ல. இவர்கள் ஒரு போதும் இராணுவத்துக்கு கட்டளையிடவில்லை. என்றாலும் மக்கள் இவர்களை அறிந்து தெரிந்து வைத்திருந்தனர். இராணுவத்தினரும் இவர்களின் நடவடிக்கைகளைத் தெரிந்து வைத்திருந்தனர். இவர்கள் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
2005 டிசம்பருக்கு முன் சரத் பொன்சேகாவை யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவருடைய இராணுவ வாழ்க்கையில் தோல்வியுற்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து படைகளை நீக்கிக் கொள்வதற்கான அனுமதியை வழங்கியது சரத் பொன்சேகாதான்.
அவர் படையில் இருக்கும்போது அதிகமாகவே கட்டளைப் பணிகளில் ஈடுபட்டார் என்றாலும் கடந்த காலங்களில் நாம் பெற்ற வெற்றிகளில் பத்தில் ஒரு பங்கையாவது அவர் பெற்றிருந்தாரா? இக் காரியங்களைச் செய்வதற்கான தகுதி பெற்ற ஒரே நபர் இவர் என்றால் இவருக்கு இவரது தகைமைகளை 2005 டிசம்பருக்கு முன்பு இவருடைய இராணுவ வாழ்க்கையின் போது நிரூபித்துக் காட்டியிருக்க முடியுமல்லவா? என தெரிவித்துள்ளார்.

0 Responses to பொன்சேகா, ஒரு சாதாரண இராணுவத் தலைவர்: கோத்தபாய