தமிழகத்தின் சிறந்த நீரியல் நிபுணரும், முன்னாள் தலைமைப் பொறியாளரும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தம்பியுமான கோமதி நாயகம் இன்று சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.
சென்னை மாம்பாக்கம் சாலையில் பார்சன் அபார்ட்மெண்டில் உள்ள அவரது வீட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
கோமதி நாயகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய கம்யனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அச்செய்தியில், ‘’தமிழக நீர்ப்பாசனத் துறையின் தலைசிறந்த பொறியியல் வல்லுனரும், உலகத்தரமிக்க ஆய்வாளருமான பழ. கோமதி நாயகம் தனது 63ஆம் வயதில் சென்னை அப்பலோ மருத்துவமனையில் காலமானார்.
தமிழகத்தின் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பொறியியலாளர் பழ.கோமதி நாயகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட்ம கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த பொறியியலாளர் கோமதி நாயகம், தாமிரபரணி நதியின் பொருளாதார மேம்பாடு குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். இதைத் தவிர கல்லணை உள்ளிட்ட தமிழகத்தின் தொன்மை மிக்க நதிகளின் சிறப்பு குறித்து நூற்றுக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். உலகின் பல நாடுகளில் நடைபெற்ற நீர்ப்பாசன கருத்தரங்குகளில் பங்கு பெற்றுள்ளார். இவரது இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பு.
மறைந்த கோமதி நாயகம் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் கடைசி தம்பியாவார். இவருக்கும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நெடுமாறன் தம்பி மரணம்: தா.பா. இரங்கல்