இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தான் நேசன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன்மோகன் சிங் மஹிந்த ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகாவை இராணுவத்தளபதி பதவியில் இருந்து உடனடியாக வெளியேற்றியதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து சரத் பொன்சேகா படையினர் மத்தியில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தார். இந்த சசூழ்நிலையானது இலங்கையில் ஒரு இராணுவப் புரட்சியை ஏற்படுத்தி விடும் என்று கொழும்பில் உள்ள ரோ அதிகாரிகள் மூலம் இந்திய பிரதமருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளை போன்று இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படலாம் என்று மன்மோகன் சிங்க இலங்கையின் ஜனாதிபதியை எச்சரித்துள்ளார்.
இராணுவத்தின் உயர் நிலை தளபதிகளை உடனடியாக இடமாற்றுமாறும் அதிகளவு பலம் பொருந்தியவராக மாறியுள்ள சரத் பொன்சோகவிற்கு அதிகாரங்கள் அற்ற பதவி ஒன்றை வழங்குமாறும் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியதாகவும் நேசன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த நடவடிக்கைகளின் போது இலங்கை ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உத்தரவுகள் பலவற்றை சரத் பொன்சேகா நிறைவேற்றத் தவறியதாகவும் அந்த உத்தரவுகள் இந்தியாவின் ஆலோசனைக்கு அமைவாகவே பிறப்பிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் தன்னிச்சையான செயல்பாடுகளால் யுத்த களத்தில் இந்தியா விரும்பிய சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெறாது போய்விட்டதாகவும் அதனால் சரத் பொன்சேகா மீது இந்தியாவிற்கு கடும் விசனம் ஏற்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 Responses to மன்மோகன் சொன்னார் மகிந்த வெளியேற்றினார்