மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தால் வெளியடப்பட்ட மாவீர் உரை மீள் ஒலிபரப்பலுடன் ஆரம்பமான நிகழ்வு தொடர்ந்து மௌன அவணக்கம் ஈகைச்சுடரேற்றல் என்று தொடர்ந்து கவிதைகள், பாடல்கள், இசைநடனம், உட்பட முத்தமிழ் கலைநிகழ்வாக தொடர்ந்து, இறுதியாக சைப்பிரஸ் வாழ் இளைஞர்களால் தமிழீழத்தின் இன்றைய நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து புலம்பெயர் மக்களின் இன்றைய கட்டாய கடமைகளை வெளிப்படுத்தும் ஒரு கருத்துருவாக்கத்துடன் மேடையேற்றப்பட்ட நாடகத்துடன் இரவு 8.30க்கு நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தது.
இம்முறை மாவீரர்தின சிறப்பு வெளியீடாக " சந்தனப்பேழை சரித்திரங்கள் " எனும் எனும் ஒரு மாவிரர்கள் நினைவு புத்தக வெளியீடு மாணவர்களால் வெளியிடப்பட்டது. காவியங்களாய் வரைந்து போன அந்த சந்தனபேழைகளின் சரித்திரங்களை தாங்கி இந்த புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

0 Responses to சைப்பிரசில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு