
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்த மானமாவீரர்களிற்கும் அவர் வழி நடந்து இந்திய சிறீலங்கா இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. நினைவொலி எழுப்பப்பட்டு துயிலும் இல்ல பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து தீபவணக்கமும் மலர் வணக்கமும் இடம்பெற்றது.
நிகழ்வில் தமிழின உணர்வாளர் செந்தமிழன் சீமான் தொலைபேசியூடாக சிறப்புரையாற்றினார். அத்துடன் கலை நிகழ்வுகளும் வானம்பாடிகள் இசைக்குழு வழங்கிய எழுச்சிப் பாடல்களும் இடம் பெற்றதைத் தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணியளவில் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
நிகழ்வு நடைபெறும் பிரதான மண்டபம் தவிர ஏனைய இரு மண்டபங்களில் நிகழ்வுகள் யாவும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வில் வழமையை விட மிக அதிகமான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






0 Responses to மொன்றியலில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ மாவீரர் நாள் 2009