Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் சரத் பொன்சேகாவை,

அவர் தற்போது வசிக்கும் அரச விடுதி இல்லத்திலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிடக் கோரி நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குருநாகலைச் சேர்ந்த சட்டத்தரணி யு.பி.ஜெயமானே என்பவரே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அரச பதவியிலிருந்து ஓய்வுபெற்று, ஜனாதிபதித் தேர்தலில் நிற்கும் ஒருவர் தமது தேர்தல் பணிக்காக அரச விடுதியில் தங்கியிருப்பது முறையற்றது என்றும் அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத் தில் கருத்து வெளியிட்டுவரும் ஒருவர் ஓய்வின் பின்னரும் அரச விடுதியைப் பயன்படுத்துவது தவறு என்றும் இதன் காரணமாக அவரை அந்த இல்லத்திலிருந்து வெளியேறுமாறு உத்தர விடவேண்டும் என்றும் அந்த மனுவில் மேலும் கூறப்பட்டிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் இந்த மனுவில் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட் டுள்ளனர்.

0 Responses to அரச விடுதியிலிருந்து சரத்தை வெளியேற்றக் கோரி மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com