Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சண்டேலீடர் பத்திரிகையில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரெ கொலைசெய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது. பெருமையான வரலாற்று சம்பவங்களை தன்னகத்தே கொண்ட சிங்கள மக்களுக்கு இவ்வாறு சரணடைந்தவர்களை கொலை செய்த மகிந்தவும் கோத்தபாயவும் கரும்புள்ளிகள் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் அரசதலைவர் வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -

ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சிலர் குடும்பத்துடன் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கடந்த காலங்களில் கதையொன்று பரவியிருந்தது. பொன்சேக்காவின் இந்தக் கருத்தின்மூலம் அதில் உண்மை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் மகிந்த, கோத்தபாய போன்றவர்கள் யுத்தத்தின் வீரர்களாக தம்மை இனங்காட்டிக்கொள்ள முயற்சின்ன, சிலர் தம்மை துட்டகைமுனுவாக இனங்காட்டிக்கொள்ள முயற்சித்தனர். வரலாற்றில் இடம்பெற்ற யுத்த சம்பவங்களை புரட்டிப்பார்த்தால், இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்படுவதால் தனித் தனியாக மோதலில் ஈடுபடுவோம் என எல்லாளன், துட்டகைமுனுவிற்கு யோசனை தெரிவித்ததாகவும் அப்போது எல்லாளன் 70 வயதுடன் காணப்பட்டதாகவும் அதில் கூறப்படுகிறது.

பின்னர் இடம்பெற்ற யுத்தத்தில் எல்லாளன் கொல்லப்பட்டதும் துட்டகைமுனு எல்லாளனுக்கு அவமரியாதை செய்யவில்லை. எல்லாளனை தனது தந்தைப் போல் தூக்கிச் சென்று அடக்கம் செய்ததுடன் அவரது கல்லறைக்கு மரியாதை செலுத்துமாறும் மக்களுக்கு துட்டகைமுனு மரியாதையை கற்பித்தான்.

மகிந்த, கோத்தபாய போன்றவர்கள் சிங்களவர்களுக்குரிய இவ்வாறான புகழ்பெற்ற வரலாற்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட கொலைகாரர்கள்: வரலாற்றின் கரும்புள்ளிகள் - என்றார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to சிங்களவர்களின் வரலாற்றில் கரும்புள்ளிகள் மகிந்த, கோத்தபாய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com